டாய்லெட்

“என் மகளின் பிறப்புறுப்பில் புண்ணென்று உங்களுக்குத் தெரியுமா? உங்களுடைய மகள்களுக்கில்லை யென்று உங்களுக்குத் தெரியுமா? உங்களுடைய மகள்களின் பள்ளிக்கூடங்களில் கழிப்பறை உண்டா? உண்டெனில் அவைகள் சுத்தம் தானா? உங்களின் மகள்களுக்கு அது ஏற்றதா? அறிவீரா? போங்கள் போய் முதலில் மகளுடைய கழிவறைகளைக் கண்காணியுங்கள், குறிப்பாக பள்ளிக்கூடங்களில்..

இப்படிக்கு: எவனோ இப்படியொரு கறுப்புப் பலகையில் எழுதி அந்த கழிப்பறைச் சுவற்றில் மாட்டப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ந்துப்போனேன் நான் மனசெல்லாம் படபடத்தது என் மகள்களை நோக்கிச் சிறகடித்து பெரியவளை அழைத்துக் கேட்டேன் ஏன்டா இப்படிப் பார்த்தேன்டா, நீங்களெல்லாம் எப்படிம்மா என்றேன் பட்டும் படாமலும்

நா’ யெல்லாம் அங்க போனதேயில்லைப்பா இப்பல்லாம் காலையில நாங்க போறதேயில்லைப்பா அடக்கிக்குவோம் பழகிடுச்சி வீட்டுக்கு வந்தாதான்ப்பா எல்லாம்”

பகீரென்றது நெருப்பின்றி கனலொன்று உள்ளே சுட்டது இல்லாத கடலுக்குள் மூழ்குவதுபோல் தவித்தேன். ஆண்களுக்கென்ன இலகுவாக மேலே அடித்துவிடுவோம் ஆம் பெண்கள் என்ன செய்வார்கள்?!! எனக்கு கோபம் கோபமாக வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

37 − 29 =