தீர்ப்பு ஏமாற்றமளிக்கிறது: முஸ்லிம் கட்சிகள், அமைப்புகள் கருத்து

அயோத்தி தீர்ப்பு ஏமாற்றமும் வேதனையும் அளிப்பதாக முஸ்லிம் கட்சிகளும் அமைப்பு களும் கருத்து தெரிவித்துள்ளன. இருப்பினும், அனைவரும் அமைதி காக்க வேண்டும் என்று கேட்டு கொண்டுள்ளன.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் கே.எம்.காதர் மொய்தீன்: பாபர் மசூதி வழக்கின் தீர்ப்பை எல்லோரும் மதிப்போம். அனைவரும் இதயப் பூர்வமாக இணைந்துவாழ்வோம்.

தமுமுக தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா: பாபர் மசூதி தீர்ப்பு பெரும் ஏமாற்றத்தையும் மன வேதனையையும் அளிக்கிறது. சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்ட இதர மதச்சார்பற்ற சக்திகளுடன் ஒருங்கிணைந்து தொடர்ந்து ஜனநாயக ரீதியில் பாடுபடுவோம்.

எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக்: இத்தீர்ப்பானது நீதி மற்றும் சட்டத் தின் அடிப்படையில் இருக்கும் என நம்பினோம். ஆனால், இத்தீர்ப்பு ஏமாற்றமளிக்கிறது. எங்களைப் போன்ற ஜனநாயக சக்திகளுக்கு வருத்தமளிக்கக் கூடியதாக உள்ளது.

அகில இந்திய தேசிய லீக் மாநிலப் பொதுச் செயலாளர் ஒய்.ஜாஹூரூத்தின்: தீர்ப்பில் முரண்பட்ட கருத்துகள் இருந்தாலும் இத்தீர்ப்பை ஏற்றுக் கொண்டு, இஸ்லாமியர்கள் அனை வரும் போராட்டம், ஆர்ப்பாட்டம் ஆகியவற்றில் ஈடுபடாமல் அமைதி காக்க வேண்டும்.

பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா தேசியப் பொதுச் செய லாளர் எம்.முஹம்மது அலி ஜின்னா: இந்தத் தீர்ப்பு நியாய மற்றது. ஏமாற்றம் அளிக்கிறது. நீதியை நிலை நாட்ட எதிர்கால போராட்டங்களில் நாங்கள் உடன் நிற்போம். அனைத்து தரப்பு மக் களும் அமைதியையும் நல்லிணக் கத்தையும் பேண வேண்டும்.

இந்திய தேசிய லீக் தேசிய பொதுச் செயலாளர் எம்ஜிகே. நிஜாமுதீன்: இந்த தீர்ப்பு எதிர்காலத்தில் சிறுபான்மையின ரின் மற்ற வழிபாட்டு தலங்களும் சொத்துகளும் அபகரிக்கப்பட அஸ்திவாரமாக அமைந்துவிடும் என அஞ்சுகிறேன். இந்த தீர்ப்பை மறுசீராய்வுக்கு உட்படுத்த வேண் டும். ராமருக்கு கோயில் கட்டக் கூடாது என்பது முஸ்லிம்களின் வாதமல்ல. சிறுபான்மையினர் நிராயுதபாணிகளாக விடப்பட்ட தாக உணர்கிறேன்.

நன்மாறன் (மார்க்சிஸ்ட் முன்னாள் எம்எல்ஏ): நினைத்தது ஒன்று, நடந்தது ஒன்று என்ற நிலையில் தீர்ப்பு வந்துள்ளது. புதிய இடத்தில் ராமர் கோயில் கட்ட தீர்ப்பளித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

மேலும் இந்திய தேசிய லீக் தேசியப் பொதுச் செயலாளர் எம்.ஜி.கே.நிஜாமுதீன், முஸ்லிம் லீக் தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா, தமிழ் தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் ஆகியோரும் தீர்ப்புக்கு அதிருப்தி தெரிவித் துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

24 − 19 =