திருவள்ளுவரை வைத்து அரசியல் செய்வதா? விஜயகாந்த் கண்டனம்

தமிழகத்தில், திருவள்ளுவரை வைத்து அரசியல் செய்வதை தவிர்க்க வேண்டும் என்று, தேமுதிக தலைவர் விஜயகாந்த் கேட்டுக் கொண்டுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில், தமிழுக்கும், தமிழர்களுக்கும் பொதுவான திருவள்ளுவரை வைத்து அரசியல் செய்வது, மிகவும் கண்டிக்கத்தக்கது. ஜாதி, மதங்கள் மற்றும் தலைவர்களின் சிலை வைத்து அரசியல் செய்தது போக, திருவள்ளுவர் சிலையை வைத்து அரசியல் செய்வதை, யாரும் ஏற்க மாட்டார்கள்.

திருவள்ளுவரை வைத்து அரசியல் செய்வதை எந்த கட்சியாக இருந்தாலும் தவிர்க்க வேண்டும். இது தேவையற்ற சட்டம் – ஒழுங்கு பிரச்சனை ஏற்பட காரணமாகிவிடும். திருவள்ளுவர் அனைவருக்கும் பொதுவானவர். இதுபோன்ற நிகழ்வுகள் மேலும் நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு, விஜயகாந்த் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

75 + = 81