தமிழகத்தில் காற்றுமாசு பரவுகிறதா? வதந்திதான் பரவுவதாக அரசு விளக்கம்

டெல்லியை போல், தமிழகத்தில் காற்று மாசு பரவவில்லை ; சென்னையில் காற்று மாசு என்று சிலர் வதந்தியை தான் பரப்பி வருவதாக, வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன், காற்று மாசு தமிழகத்தில் பரவுவதாக வெளியாகும் தகவல்களுக்கு விளக்கம் அளித்தார். அவர் கூறியதாவது:

தமிழகத்தில், குறிப்பாக சென்னையில் காற்று மாசு எதுவும் பரவவில்லை. இதுபற்றி சிலர் வதந்தியை தான் பரப்புகிறார்கள். இதை, மாசுக்கட்டுப்பாடு வாரியம் தொடர்ந்து கவனித்து வருகிறது.

தமிழகத்தில் பயன்பாட்டில் இல்லாத 9 ஆயிரத்து 940 ஆழ்துளை கிணறுகள், மழைநீர் சேகரிப்பு கிணறுகளாக மாற்றப்பட்டுள்ளது. திறந்து கிடக்கும் சாலையோர கிணறுகள் மற்றும் ஆழ்துளை கிணறுகள் குறித்து, 1077 என்ற எண்ணையும்; மாவட்டம் வாரியாக 1070 என்ற எண்ணுக்கும் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

41 − 39 =