ப. சிதம்பரத்திற்கு ஜாமின் வழங்க டெல்லி உயர் நீதிமன்றம் மறுப்பு

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு இடைக்கால ஜாமீன் வழங்க, டெல்லி உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து விட்டது.

மும்பையை சேர்ந்த ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில், முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், ஆகஸ்டு மாதம் 21ஆம் தேதி சி.பி.ஐ. அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

சி.பி.ஐ. தனி நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட அவர், டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். ப.சிதம்பரத்துக்கு நேற்று மதியம் வயிற்று வலி ஏற்பட்டது. இதையடுத்து, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அவருக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டன. நேற்றிரவே அவர், மீண்டும் திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

இதற்கிடையே, உடல்நிலையை காரணம் காட்டி டெல்லி உயர்நீதிமன்றத்தில் இடைக்கால ஜாமீன் வழங்க, ப. சிதம்பரம் மனு தாக்கல் செய்தார். ஆனால், அவரது உடல்நிலை நன்றாக உள்ளதாக, எய்ம்ஸ் மருத்துவ குழு, டெல்லி உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது.

ப. சிதம்பரத்தின் ஜாமின் மனு, டெல்லி உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. வந்தது வழக்கை விசாரித்த நீதிமன்றம், ப.சிதம்பரத்திற்கு இடைக்கால ஜாமீன் வழங்க மறுத்துவிட்டது. எனினும், ப.சிதம்பரத்திற்கு கொசுவலை கொடுக்கவும், வாரம் ஒருமுறை மருத்துவ பரிசோதனை செய்யவும் உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

+ 75 = 79