புதிய எம்.எல்.ஏ.க்கள் இருவர் பதவியேற்பு! சட்டசபையில் அதிமுக பலம் 124 ஆனது

விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி இடைத்தேர்தலில் வெற்றிபெற்ற அதிமுக எம்.எல்.ஏ.க்கள் முத்தமிழ்ச்செல்வன் மற்றும் நாராயணன் ஆகியோர், இன்று பதவியேற்றனர்.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி, நெல்லை மாவட்டம் நாங்குநேரி ஆகிய இரு சட்டசபை தொகுதிகளுக்கும் கடந்த 21இல், இடைத்தேர்தல் நடந்தது. இதில் விக்கிரவாண்டியில் முத்தமிழ்ச்செல்வன், நாங்குநேரியில் ரெட்டியார்பட்டி நாராயணன் இருவரும் னும் அ.தி.மு.க எம்.எல்.ஏ.க்களாக வெற்றி பெற்றனர்.

இன்று காலை, அவர்கள் இருவரும் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர். அதேபோல், முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் ஆகியோர், ஜெயலலிதா நினைவிடத்தில், மலர்தூவி மரியாதை செய்தனர்.

பின்னர், சென்னை தலைமைச்செயலகத்தில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் முன்னிலையில், இருவரும் எம்.எல்.ஏ. ஆக பதவியேற்றுக்கொண்டனர். இருவருக்கும் சபாநாயகர் தனபால் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இதன் மூலம், தமிழக சட்டப்பேரவையில் அதிமுகவின் பலம் 124ஆக உயர்ந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

48 − 44 =