விமான நிலையத்தில் கேட்பாரற்று கிடந்த மர்மப்பை – வெடிகுண்டா என விசாரணை

டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் இன்று அதிகாலை, கேட்பாரற்று கிடந்த பையை அதிகாரிகள் கண்டெடுத்தனர். அதில் வெடிபொருட்கள் இருப்பதற்காக சமிக்கைகள் கிடைத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

புதுடெல்லி இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தில், இன்று அதிகாலை 1 மணியளவில், டெர்மினல் -3 இன் வருகைப்பகுதியில், கேட்பாரற்று கிடந்த பையை, சி.ஐ.எஸ்.எப். அதிகாரி ஒருவர் கவனித்தார். அந்த பை, சந்தேகத்தை ஏற்படுத்தியதால், அந்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள், ஆய்வு செய்தனர். இதில், பைக்குள் இருந்து ஆர்.டி.எக்ஸ். இருப்பதற்கான சமிக்கைகள் வந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். மோப்ப நாய் உதவியுடன் பையை சோதித்ததில், வெடிக்கும் தன்மையுள்ள பொருள் இருப்பதாக காட்டியது.

பரபரப்படைந்த அதிகாரிகள், உடனடியாக, வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் அகற்றும் படையினர் வரவழைத்தனர்; அந்த பகுதி சுற்றி வளைக்கப்பட்டது. வாகனங்கள் மற்றும் பயணிகளின் நடமாட்டம் நிறுத்தப்பட்டது. பையை எக்ஸ்ரே எடுத்ததில், சந்தேகத்திற்குரிய தகவல்களை அது வெளிப்படுத்தியது.

இதன்பின்னர், அந்த மர்மப்பை இன்று அதிகாலையில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் உள்ள குளிரூட்டும் குழிக்கு பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட்டது. தொடர்ந்து விசாரணை நடக்கிறது. அதன் பிறகே விமான நிலையத்தில் பயணிகள் மற்றும் வாகனங்களின் இயக்கம் மீண்டும் அனுமதிக்கப்பட்டது.

டெல்லி விமான நிலையத்தில் வெடிபொருள் என்று சந்தேகிக்கப்படும் மர்மப்பை கண்டெடுக்கப்பட்டது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

7 + 3 =