டெல்டா மாவட்டங்கள், தென் தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்பு

தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களின் பல பகுதிகளில், அடுத்த 24 மணி நேரத்தில் கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்ட தகவலில், அடுத்து வரும் 24 மணி நேரத்தில் தென் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும் வடதமிழகத்தில் அநேக இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.

கனமழை பொருத்தவரையில் தென் தமிழக மாவட்டங்கள் குமரி ,நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, டெல்டா மாவட்டங்களிலும் மழையை எதிர்பார்க்கலாம்.

அதேபோல், வட தமிழக மாவட்டங்களான கடலூர், விழுப்புரம், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர், திருவள்ளூர், கிருஷ்ணகிரி ,தர்மபுரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

மீனவர்கள் மன்னார் வளைகுடா தென் தமிழகப் பகுதிகள், குமரி கடல் பகுதியில் மாலத்தீவுகளில் லட்சத் தீவு பகுதிகளுக்கு வரும் 29, 30, 31 தேதிகளில் செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

1 + 3 =