பொருளாதார வளர்ச்சிக்கு நிலையான கச்சா எண்ணெய் விலை அவசியம் – பிரதமர் மோடி

வளரும் நாடுகள் மற்றும் உலக பொருளாதார வளர்ச்சிக்கு நிலையான கச்சா எண்ணெய் விலை இன்றியமையாதது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக சவுதி அரேபியாவுக்கு சென்றுள்ளார். சவுதி அரேபிய மன்னரின் அழைப்பை ஏற்று சென்றுள்ள பிரதமர் மோடியை, கிங் காலித் சர்வதேச விமான நிலையத்தில் ரியாத் மாகாண ஆளுநர் பைசல் பின் பந்தர் அல் சவுத் வரவேற்றார்.

இதையடுத்து அரேபியா செய்தித் துறைக்கு அளித்த பேட்டியில், தீவிரவாத எதிர்ப்பு, பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் இந்தியா, சவுதி அரேபியா ஆகிய இரு நாடுகள் இணைந்து செயல்படுவது மகிழ்ச்சி தருகிறது என்று, பிரதமர் மோடி கூறினார்.

இந்தியா – சவுதி அரேபியா ஆகிய 2 நாடுகளுமே பாதுகாப்பு விவகாரத்தில் அண்டை நாடுகளால் ஒரே மாதிரியான பிரச்சினையை எதிர்க்கொண்டு வருவதாகவும் மோடி எடுத்துரைத்தார்.

பிரதமரின் பயணத்தின்போது இந்தியாவுக்கும் சவுதி அரேபியாவுக்கும் இடையேயான எரிசக்தி, பாதுகாப்பு, கொள்முதல் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து தொடர்பான பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன. தொடர்ந்து அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் பொதுகூட்டத்தில் அவர் பேசவுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

2 + 4 =