விபத்தில்லா தீபாவளி குறித்த துண்டுப்பிரசுரம் மற்றும் செயல்முறை விளக்கம் …

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி நிலையத்தின் சார்பாக பொன்னமராவதி வட்டம் வேந்தன்பட்டி செயிண்ட் ஜோசப் மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவ மாணவிகளுக்கு விபத்தில்லா தீபாவளி பண்டிகையை கொண்டாடுவது தொடர்பான செயல்முறை விளக்கம் மற்றும் துண்டுப்பிரசுரம் வழங்கப்பட்டது. இவ்விழாவிற்கு பொன்னமராவதி தீயணைப்பு நிலைய அலுவலர் தியாகராஜன் தலைமை வகித்தார். பள்ளியின் முதல்வர் அமலா ஜோசப் அனைவரையும் வரவேற்றார். இதில் மாணவர்களுக்கான விபத்தில்லா தீபாவளி குறித்த செயல்முறை விளக்கமும் விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் முறை குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. மேலும் மேலைச்சிவபுரி,  ஏனாதி மற்றும் தொட்டியம்பட்டி கிராம பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது. 

வரலாறுக்காக…பொன்னமராவதியிலிருந்து இளையராஜா