நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவ.18ல் கூடுகிறது

நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர், வரும் நவம்பர் மாதம் 18ஆம் தேதி கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில், அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடந்த கூட்டத்தில், நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் பற்றி விவாதிக்கப்பட்டது. இதில், நவம்பர் 18இல் கூட்டத்தொடரை தொடங்கி, டிசம்பர் 13 வரை நடத்துவது என்று முடிவெடுக்கப்பட்டது.

கூட்டத்தொடர் குறித்த முடிவு, நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சகம் மற்றும் இரு அவைகளின் செயலகங்களுக்கும் அனுப்பி வைக்கப்படும்.

நரேந்திர மோடி இரண்டாவது முறையாக பதவியேற்ற பின், கடந்த முறை நடந்த கூட்டத்தொடரில், 36 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன; அதிக அலுவல்களை நாடாளுமன்றம் மேற்கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.