வீட்டிற்குள் புகுந்தது மழைநீர்

புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி ஒன்றியம், செய்யானம் கிராமத்தில்  மகாலிங்கம் என்பவர் வீட்டுக்குள் புகுந்த மழை நீரை அப்புறப்படுத்தும் காட்சி இது. மழை நீர் வடிகால் வாய்க்காலை அதே பகுதியை சேர்ந்த அய்யாக்கண்ணு என்பவர் மூடியதாக கூறப்படுகின்றது. அந்த இடத்திற்கு அய்யாக்கண்ணு பட்டா வைத்திருப்பதாக கூறி தன்னுடைய இடத்தை அவர் ஆக்கிரமித்துள்ளாராம்.மணல்மேல்குடி வட்டாச்சியர் தலைமையில் சமாதான கூட்டமும் கடந்த ஆண்டு நடத்தப்பட்டதாம். கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் படி  வடிகால் வாய்க்கல் அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது.                          ஆனால் சில தினங்களுக்கு முன் மீண்டும் அந்த வாய்க்கால் மூடப்பட்டதன் விளைவாக நேற்று பெய்தமழையால் வீட்டிற்குள் மீண்டும் தண்னீர் புகுந்துள்ளது.                                     

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

1 + 9 =