ஈரோட்டில் 5 மணி நேரமாக கொட்டித் தீர்த்த கனமழை… வெள்ளத்தில் மூழ்கிய பயிர்கள்..!

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இரவு பெய்த கனமழையினால் ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட விளைநிலத்தில் பயிரிடப்பட்டிருந்த நெல், வாழை, கரும்பு உள்ளிட்ட பயிர்கள் சேதமடைந்தன.

நேற்று இரவு ஐந்து மணி நேரத்திற்கும் மேலாக இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் நகராட்சியின் மையப்பகுதியில் செல்லும் கீரிப்பள்ளம் ஓடை தடப்பள்ளி வாய்க்கால் ஆகியவற்றில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்த மழை வெள்ளநீர் நேரடியாகச் சென்று தடப்பள்ளி வாய்க்கால் பாசன பகுதியில் உள்ள விளைநிலங்களில் புகுந்ததால் அங்கு பயிரிடப்பட்டுள்ள நெல், வாழை, கரும்பு உள்ளிட்ட பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது.

பிரசித்தி பெற்ற பாரியூர் கொண்டத்துக்காளியம்மன் கோவில் வளாகத்திலும் வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தடப்பள்ளி பாசன வாய்க்காலில் ஏற்பட்ட வெள்ளம் கரைகளை தாண்டி வயல்களில் புகுந்துள்ளது. நடவு முடிந்து ஒரு மாதமே ஆகியுள்ள நிலையில் சாகுபடி செய்யப்பட்டிருந்த பயிர்கள் வெள்ள நீரால் வீணாகும் அபாயம் இருப்பதால் தமிழ்நாடு அரசு உரிய இழப்பீடு வ‌ழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

கோபிசெட்டிபாளையம் தாலுகாவில் நேற்று இரவு அதிகப்பட்சமாக 134 மி.மீரும் நம்பியூர் தாலுகாவில் 120 மி.மீ மழையும் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

− 1 = 1