மீண்டும் ரூ.29000 நெருங்குகிறது தங்கம் விலை : சவரனுக்கு ரூ.400 உயர்வு

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.28,848க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின் விலை சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப நிர்ணயிக்கப்படுகிறது. கடந்த மாதம் தங்கம் விலை இதுவரை இல்லாத அளவாக சவரன் 30,000ஐ தாண்டி விற்பனையானது. ஆனால், அமெரிக்கா-சீனா இடையே வர்த்தகப் போர் முடிவுக்கு வரும் சாதகமான சூழல் உள்ளதால் தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வந்தது. இதன் எதிரொலியாக சென்னையில் நேற்று காலையில் கிராமுக்கு 43 குறைந்து 3,545க்கு விற்பனையானது.

பின்னர், செப்டம்பருக்கான அமெரிக்க தொழில்துறை உற்பத்தி குறியீடு 47.8% சதவீதமாக குறைந்ததாக புள்ளி விவரம் வெளியானது. உற்பத்தி புள்ளி 50 சதவீதத்துக்கு மேல் இருந்தால்தான், துறை வளர்ச்சி சிறந்ததாக இருக்கும் என மதிப்பிடப்படுகிறது. சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் 1,463 டாலர் வரை சரிந்த தங்கம் மீண்டும் 1,471 டாலர் வரை உயர்ந்தது. இதனால் சென்னையில் ஆபரண தங்கம் நேற்று மாலையில் இருந்து கிராமுக்கு ரூ.11 உயர்ந்தது. இந்நிலையில் இன்று காலை சென்னையில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.400 உயர்ந்து ரூ.28,848-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

89 − = 88