18 வயதுக்கு உட்பட்டோருக்கு செப்டம்பரில் கொரோனா தடுப்பூசி :தேசிய வைராலஜி மையம்

இந்தியாவில் 18 வயதுக்குட்பட்டோருக்கு அடுத்த மாதம் முதல் கொரோனா தடுப்பூசி கிடைக்க வாய்ப்புள்ளதாக, தேசிய வைராலஜி மையத்தின் இயக்குநர் ப்ரியா ஆப்ரஹாம் தெரிவித்துள்ளார்.

 கொரோனா தடுப்பு நடவடிக்கையின் முக்கிய அம்சமாக, நாடு முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இரண்டு தவணை தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. இதன் அடுத்தகட்டமாக, 18 வயதுக்குட்பட்டோருக்கான தடுப்பூசிக்கான ஆய்வுகள் நடந்து வருகிறது. அந்த ஆய்வுகளின் முடிவுகள் இம்மாதத்திலேயே வந்து சேருமென தேசிய வைராலஜி மைய இயக்குநர் ப்ரியா ஆப்ரஹாம் தெரிவித்துள்ளார்.