140 பயங்கரவாதிகள் இந்திய எல்லையில் ஊடுருவ காத்திருப்பு என இந்திய ராணுவ அதிகாரி தகவல்

பாகிஸ்தான் ஏவுதளங்களில் இருந்து சுமார் 140 பயங்கரவாதிகள் இந்திய எல்லையில் ஊடுருவ தயாராக இருப்பதை ராணுவம் கவனித்து வருகிறது

புல்வாமா தாக்குதலுக்கு பிறகு இந்தியா பாகிஸ்தானுடனான நட்புறவிலிருந்து விலகி அழுத்தம் கொடுத்து வந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் இரு நாடுகளும் தீவிர போர்நிறுத்த ஒப்பந்தம் செய்து கொண்ட நிலையில் போர் நிறுத்த ஒப்பந்தம் அமலில் இருந்தபோதும் காஷ்மீர் எல்லைக்கட்டுப்பாட்டு பகுதியில் ஊடுருவ தயார் நிலையில் பயங்கரவாதிகள் பாகிஸ்தான் எல்லையில் தயாராக இருப்பதாக இந்திய ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்தார். பாகிஸ்தான் ஏவுதளங்களில் இருந்து சுமார் 140 பயங்கரவாதிகள் ஊடுருவ தயார் நிலையில் இருப்பதை ராணுவம் கவனித்து அவர்கள் எப்போது வேண்டுமானாலும் காஷ்மீருக்குள் ஊடுருவலாம் என இந்திய ராணுவம் கவனித்து வருகிறது  பயங்கர தாக்குதலை நடத்த பயங்கரவாதிகள் உயரமான குகைப் பகுதிகளில் பதுங்கியிருக்கிறார்கள் என தகவல்.