புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கர்பிணியாக்கி குழந்தை பிறக்க காரணமாக இருந்த குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை மற்றும் 2.50 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து புதுக்கோட்டை மகிளா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி பகுதியை சேர்ந்த 8-ஆம் வகுப்பு படித்த 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து, அந்த சிறுமிக்கு குழந்தை பிறக்க காரணமாக இருந்த பாலமுருகன்(35) என்பவரை அறந்தாங்கி அனைத்து மகளிர் காவல் நிலைய காவலர்கள் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, கைது செய்து சிறையில் அடைத்திருந்தனர்.
இந்த வழக்கு புதுக்கோட்டை மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் வழக்கு விசாரணை முடிந்து இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதன் அடிப்படையில் 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து குழந்தை பிறக்க காரணமாக இருந்த குற்றவாளி பாலமுருகனுக்கு ஆயுள் தண்டனை மற்றும் 2.50 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து புதுக்கோட்டை மகிளா நீதிமன்ற நீதிபதி சத்யா தீர்ப்பு வழங்கினார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு ஏற்கனவே இரண்டு லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கியுள்ள நிலையில் தற்போது குற்றவாளிக்கு விதிக்கப்பட்டுள்ள 2.50 லட்சம் ரூபாய் அபராத தொகையையும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு வழங்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்