1,300 கிலோ ரேஷன் அரிசி பதுக்கல்: புதுகை அருகே ஒருவர் கைது

புதுக்கோட்டை அருகே 1,300 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தவரை குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

திருச்சி உட்கோட்ட குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை காவல்துறை துணைக்கண்காணிப்பாளர் உத்தரவுப்படி, புதுக்கோட்டை குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை காவல் உதவி ஆய்வாளர் செல்வமணி மற்றும் காவலர்களுடன் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது, கிடைத்த ரகசிய தகவலின் படி, குன்னாண்டார் கோவில் பகுதியில் தங்கவேல் மகன் சேகர் (வயது 42) என்பவர் சம்பட்டி விடுதி நால்ரோடு அருகே பாழடைந்த கட்டிடத்தில் சுமார் 1,300 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்ததை கைப்பற்றினர்.

ரேஷன் அரிசியுடன் சேகரை கைது செய்து புதுக்கோட்டை குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை அலுவலகம் கொண்டு வந்து விசாரணை செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

− 4 = 1