
அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்வதன் அத்தியாவசியத்தை வலியுறுத்தி 12,800 ஆணிகள் கொண்ட ஆணிபடுக்கையின் மீது ஏறி நின்றவாறு தொடர்ந்து 15 மணி நேரம் வால் சுற்றி சோழன் உலக சாதனை படைத்துள்ளார் விரகனூர் வேலம்மாள் பள்ளியில் 11-ம் வகுப்பு படிக்கும் மாணவன் கிர்த்திஷ் மதுரை கோசாகுளத்தில் நடந்த இந்த சாதனையை சோழன் உலக சாதனை புத்தக நிறுவனம் அங்கீகரித்துள்ளது .
இந்த நிகழ்வின் சிறப்பு விருந்தினர்களாக மத்திய புலனாய்வுத்துறை அதிகாரிகளான ஆளவந்தார், சரவணன் மற்றும் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் வெங்கடேசன் கலந்து கொண்டு சிறப்பித்தனர் .
இந்த நிகழ்வை வி.கே.எஸ் மார்ஷியல் ஆர்ட்ஸ் அறக்கட்டளையின் நிறுவனர், சிலம்பம் பயிற்சி ஆசிரியர் சண்முகவேல் ஒருங்கிணைத்திருந்தார் .
இந்த புதிய சோழன் உலக சாதனை படைத்த கிர்த்திஷ்யை சோழன் உலக சாதனை புத்தக நிறுவனத்தின் நிறுவனர் நிமலன் நீலமேகம் மற்றும் தலைமை செயற்குழு உறுப்பினர்கள் மதுரை மாவட்ட பொது செயலாளர் கஜேந்திரன், முகாமையாளர் நாகராஜன், இந்நிறுவனத்தின் பல நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் மாநில மற்றும் மாவட்ட தலைவர்கள் மற்றும் கணேசன் (தமிழ்நாடு காவல்துறை) என பலரும் மாணவனை வாழ்த்தி பாராட்டினார்கள்.