திருமயம் சண்முகநாதன் பொறியியல் கல்லூரியில்  நேரடி வளாக நேர்காணல் : 22 மாணவர்கள் தேர்வு

 திருமயம் சண்முகநாதன் பொறியியல் கல்லூரியில் இறுதியாண்டு இயந்திரவியல், மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறை மாணவர்களுக்கான நேரடி வளாக நேர்காணல் இன்று நடைபெற்றது. வளாக நேர்காணலுக்கு வந்திருந்த அனைவரையும் கல்லூரி வேலை வாய்ப்பு அலுவலர்  ஆர்.சொர்ணலதா வரவேற்றார், கல்லூரி முதல்வர் குழ.முத்துராமு வாழ்த்துரை வழங்கிப் பேசினார், சென்னை ஜே பி எம். ஆட்டோ லிமிடெட் நிறுவன மனித வளத்துறை அதிகாரி புருஷோத்தமன் தலைமை உரை நிகழ்த்தி வளாக நேர்காணலை நடத்தினார்.

இவ்வளாக நேர்காணல் எழுத்துத் தேர்வு, கலந்தாய்வு மற்றும் நேர்முகத் தேர்வு ஆகிய மூன்று கட்டங்களாக நடைபெற்றது, இந்த வளாக நேர்காணலில் கல்லூரியில் இறுதியாண்டு பயிலும் இயந்திரவியல், மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறை மாணவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இவ்வளாக நேர்காணலில் 22 மாணவர்கள் தேர்வு பெற்றனர், அவர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கபட்டன. இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி இயந்திரவியல் துறைத்தலைவர் மோகன் மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சிக் குழுவினர் செய்திருந்தனர், நிறைவாக கல்லூரி உதவி வேலைவாய்ப்பு அலுவலர் திவ்ய சொப்னா நன்றி கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

43 − 40 =