11 குழந்தைகளுக்கு தேசிய விருது  – ஜனாபதிபதி திரவுபதி முர்மு வழங்குகிறார்

மத்திய அரசு குழந்தைகளின் சிறப்பான சாதனைகளுக்காக பிரதான் மந்திரி ராஷ்ட்ரிய பால் புரஸ்கார் விருதை வழங்குகிறது, தேசிய அங்கீகாரத்திற்கு தகுதியான கலை மற்றும் கலாச்சாரம், துணிச்சல், புத்தாக்கம், கல்வியியல், சமூக சேவை மற்றும் விளையாட்டு ஆகிய ஆறு பிரிவுகளில் சிறந்து விளங்கியதற்காக 5-18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.

அதன்படி இந்த ஆண்டு, கலை மற்றும் கலாச்சாரத் துறையில் (4), துணிச்சல் (1), புதுமை (2), சமூக சேவை (1) மற்றும் விளையாட்டு (3) என நாட்டின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட 11 குழந்தைகளுக்கு பிரதான் மந்திரி ராஷ்ட்ரிய பால் புரஸ்கார் வழங்கப்படுகிறது. இந்நிலையில், மேற்கூறிய பிரிவுகளின் கீழ் சாதனை புரிந்த 11 சிறுவர்களுக்கு பிரதான் மந்திரி ராஷ்ட்ரிய பால் புரஸ்கார் விருது-2023 வழங்கப்படுகிறது. இந்த விருதினை ஜனாதிபதி தலைவர் திரவுபதி முர்மு நாளை வழங்குகிறார். பிரதான் மந்திரி ராஷ்ட்ரிய பால் புரஸ்கார் விருது பெறுபவர்கள் ஒவ்வொருவருக்கும் பதக்கம், ரூ. 1 லட்சம் ரொக்கப் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்படுகிறது.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

63 − = 55