100-நாள் வேலையில் ஈடுபட்டிருந்த கூலித்தொழிலாளி மயங்கி விழுந்து உயிரிழப்பு.

தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் கிராமப்புற ஏழை, எளிய  மற்றும் விவசாயக் கூலித் தொழிலாளர்களுக்கு பொருளாதார நிலையை உயர்த்தும் எண்ணத்தோடு மத்திய அரசாங்கம் 100 நாள் வேலைத் உறுதி திட்டத்தை அறிமுகப்படுத்தியது,கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை வட்டம், திருநாவலூர் ஒன்றியத்தில் உள்ள செம்மனந்தல் ஊராட்சி, எஸ்.குச்சிபாளையம் கிராமத்தில் இன்று காலை 9 மணிக்கு தொடங்கி 100 நாள் வேலை   ஓடை தூர்வாரும் பணி நடைபெற்றது இந்த பணியில்  100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஈடுபட்டிருந்தனர்.அப்பொழுது வேலை செய்து கொண்டிருந்த  கூலி தொழிலாளி புண்ணியமூர்த்தி  திடீரென மயங்கி விழுந்துள்ளார்,  உடனடியாக அங்கு பணியில் ஈடுபட்டிருந்த பொது மக்கள் அவரை அருகில் இருந்த திருநாவலூர் அரசு வட்டார ஆரம்ப சுகாதார  மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.அப்போது பரிசோதித்த மருத்துவர் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளார், இச்சம்பவம்  நூறு நாள் வேலைத் திட்டத்தில் வேலை செய்துகொண்டிருந்த மக்களிடத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.100 நாள் வேலைத்திட்டத்தில் உயிரிழந்த புண்ணியமூர்த்தி குடும்பத்திற்கு  அரசு ஏதாவது நிவாரண நிதி வழங்க வேண்டும் என அந்த கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.