100 நாள் திட்டத்தில் நெட்வொர்க் பிரச்சனை கூறி யாரையும் வீட்டிற்கு அனுப்பக்கூடாது: அமைச்சர் கறார்!

அறந்தாங்கியில் நடைபெற்ற அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் நடைபெறும் பணிகள் தொடக்க விழாவில் , 100 நாள் வேலை திட்டத்தில் நெட்வொர்க் பிரச்சினையை காரணம் காட்டி யாரையும் வீட்டிற்கு அனுப்பாமல் வேலை கொடுக்க வேண்டும் என்று அதிகாரிகளை அமைச்சர் மெய்யநாதன் அறிவுறுத்தினார்.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே அரசர்குளம் கீழ்பாதி ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் வாழப்பிள்ளையார் ஊரணி சீரமைக்கும் பணி, பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணிகள், தொடக்கப்பள்ளிக்கு ஆண்கள் கழிவறை கட்டும்பணி, புதிய நர்சரிக்கு முள்வேலி அமைத்தல், நெற்களம் அமைக்கும் பணி உள்ளிட்ட மொத்தம் ரூ.48 லட்சம் மதிப்பீட்டில் ஒன்பது பணிகளுக்கான பூமிபூஜை செய்து சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைத்தார்.

முன்னதாக அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்ததாவது:

சமீப காலமாக 100 நாள் வேலை திட்டத்தில் நெட்வொர்க் பிரச்சனை ஏற்படுகிறது. நெட்வொர்க் பிரச்சனை காரணம் காட்டி யாரையும் வீட்டிற்கு அனுப்பக்கூடாது. நெட்வொர்க் பிரச்சனை என வேலை கொடுக்காமல் யாரையும் வீட்டுக்கு அனுப்பினால் உடனடியாக தகவல் சொல்லுங்கள்.

அவ்வாறு தகவல் தெரிந்தால் வேலை கொடுக்காமல் வீட்டுக்கு அனுப்பியவர்கள் மீது திட்ட ஊரக வளர்ச்சி இயக்குனர் மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். விரைவில் 100 நாள் வேலை திட்டத்தில் ஏற்படும் நெட்வொர்க் பிரச்சனை சரி செய்யப்படும் என்று அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கவிதாப்ரியா, அறந்தாங்கி வருவாய் கோட்டாட்சியர் சொர்ணராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர் சிங்காரவேலு, ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் மகேஸ்வரி சண்முகநாதன், நகராட்சி தலைவர் ஆனந்த், மாவட்ட கவுன்சிலர் சரிதா மேகராஜன், ஆத்மா கமிட்டி தலைவர் குமார், நகர்மன்ற உறுப்பினர் துளசிராமன் அதிகாரிகள், மக்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

− 1 = 5