10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் புதுக்கோட்டை ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் பள்ளி மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை

புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வு எழுதிய மாணவர்கள் வழக்கம்போல் நூறு சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளார்கள். மாணவர்கள் 30, மாணவிகள் 46 ,மொத்தம் தேர்வு எழுதிய 76 பேரும் வெற்றி பெற்றுள்ளார்கள். திவ்ய ஸ்ரீ, பார்கவி, முகமது ரிஸ்வான், ஸ்ரீவர்ஷினி, கயல்விழி, கோபிகா ஸ்ரீ ஆகியோர் சிறப்பிடம் பெற்றுள்ளனர்.

திவ்ய ஸ்ரீ 487/500 ,முகமது ரிஸ்வான் 471/500, பார்கவி 479/500, ஸ்ரீவர்ஷினி 466/500, கயல்விழி 463/500 ,கோபிகா ஸ்ரீ 460/500 வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளியின் முதல்வர் தங்கம் மூர்த்தி, பள்ளியின் ஆலோசகர் அஞ்சலிதேவி தங்கம்மூர்த்தி, நிர்வாக இயக்குநர் நிவேதிதா மூர்த்தி, பள்ளியின் சிஇஓ காவியாமூர்த்தி பள்ளியின் துணைமுதல்வர் குமாரவேல், ஒருங்கிணைப்பாளர் அபிராம சுந்தரி, ஆசிரியர்கள் கமல்ராஜ், ராஜாமணி, ஜெயசுதா, பவானி, சித்திரைச்செல்வி, சத்தியராஜ், சின்னையா சரவண பவா மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் கௌரி, வரலெட்சுமி, கோமதி மேலாளர் ராஜா, காசாவயல் கண்ணன், உதயகுமார், நீலகண்டன், சரசு ஆகியோர் பாராட்டி இனிப்புகள் வழங்கினர்.