ஸ்ரீ அரவிந்தர் மீரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பிரமலைக்கள்ளர் முன்னேற்ற நலச் சங்கம் (பிரசிடென்சி சர்விஸ் கிளப்) உறுப்பினர்களின் குடும்பப் பொங்கல் விழா நடைபெற்றது. விழா சங்கத்தின் துணைத்தலைவர் திரு .அழகேசன் தலைமையிலும் செயலாளர் திரு.இராமச்சந்திரன் முன்னிலையிலும் நடைபெற்றது.

விழாவில் ஆண்கள்,பெண்கள், குழந்தைகளுக்குத் தனித்தனியே விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. சிறப்பு விருந்தினர்கள் நீதியரசர் தெய்வராஜன்,நீதியரசர் மாயாண்டி,ஸ்ரீ அரவிந்தர் மீரா பள்ளியின் தாளாளர் திரு.சந்திரன்,திரு.இராஜ்மோகன்(Enviro Care India Pvt Ltd),வழக்கறிஞர் திரு.பழனிக்குமரன் ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்திப் பேசினர். மதுரை,திண்டுக்கல்,தேனி ஆகிய மாவட்டங்களில் அரசு கள்ளர் பள்ளியில் 10 ஆம் வகுப்பு,12 ஆம் வகுப்பில் முதல் மற்றும் இரண்டாம் மதிப்பெண் பெற்ற பிரமலைக்கள்ளர் சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு நினைவுப் பரிசும்,ஊக்கத்தொகையும் வழங்கிப் பாராட்டினர்.விழா ஏற்பாடுகளை சங்கத் துணைச் செயலாளர் திருநாவுக்கரசு , நிர்வாகிகள் மூர்த்தி,உக்கிரபாண்டியன்,ஆசைராஜன், சரவணன் மற்றும் ஆகியோர் முன்னின்று செய்தனர்.இறுதியாக சங்கப் பொருளாளர் கபிலபரணன் நன்றியுரை வழங்கினார்.