ஸ்ரீரங்கம் கிழக்கு ‌ரங்கா நடுநிலைப் பள்ளியில் ஆசிரியர் தின விழா.

திருச்சி ஸ்ரீரங்கம் எஜுகேஷனல் சொசைட்டியின் நடுநிலைப்பள்ளி மற்றும் அரங்கநாயகி ஆரம்பப்பள்ளி, ஆரோக்கிய அவ்ரத் தொண்டு நிறுவனம் இணைந்து‌ நடத்தும் ஆசிரியர் தின விழா.
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ஆரோக்கிய அவ்ரத் தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் டாக்டர் பிரியா மகேஸ்வரி நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.‌ இவர் கடந்த நான்கு வருடங்களாக பல்வேறு நலத்திட்ட உதவிகளை குறிப்பாக பெண்களின் வாழ்க்கைத் தரம் உயர்வதற்கு ஏற்ற வகையில் தொழில் பயிற்சி அளித்து வருகிறார்.ஆசிரியர் தினத்தை முன்னிட்டு‌ கிழக்கு ரங்கா நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அரங்கநாயகி ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. நிர்வாக செயலர்  கஸ்தூரி ரங்கன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக அருட் தந்தை டாக்டர். ஜான் ஆண்டனி சிறப்பாக பணிபுரிந்த 17 ஆசிரியர்களுக்கு சான்றிதழ் வழங்கினார். இந்நிகழ்ச்சியில்கங்காரு நிறுவன அமைப்பாளர்  ராஜா குமார் பொறுப்பாளர் தீபா ராஜா எஸ் கே வி பவுண்டேஷன் ஐஸ்வர்யா ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில்அரங்கநாயகி ஆரம்பப் பள்ளி தலைமையாசிரியை சாந்தி  நன்றியுரை ஆற்றினார்.