வாக்காளர் பெயர் சேர்த்தல் நீக்கல் பணிகள்: காரைக்கால் ஆட்சியர் ஆய்வு

புதுவை மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் புதிய வாக்காளர்களாக பதிவு செய்து கொள்வதற்கும் மற்றும் பெயர் நீக்கல் பெயர் சேர்த்தல் போன்ற பணிகள் இன்று 19ம் தேதி நடந்தது. நாளை 20ம் தேதியும் நடக்கிறது.

மேலும், புகைப்பட அடையாள அட்டை பெறுதல் மற்றும் புகைப்பட அடையாள அட்டையை ஆதார் எண்ணுடன் இணைத்தல் போன்ற பணிகளும் நடைபெற்று வருகின்றன. இப்பணியினை காரைக்கால் மாவட்ட ஆட்சியரும் மாவட்ட தேர்தல் அதிகாரியுமான முகமது மன்சூர் ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வின்போது, துணை மாவட்ட ஆட்சியரும், வாக்காளர் பதிவு அதிகாரியுமான ஆதர்ஷ், இப்பணி அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வரும் 26, 27ம் தேதிகளில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்று பொதுமக்கள் குறைகளை நிவர்த்தி செய்து கொள்ளலாம் என்று தெரிவித்தார்.