முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் புத்தாண்டு வாழ்த்து புத்தாண்டே வருக… புதுவாழ்வு தருக…

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆங்கில புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது டுவிட்டர் பக்கதில் அவர் கூறியிருப்பதாவது, அனைத்துத் துறைகளிலும் எழுச்சியை நோக்கிய ஆண்டாக 2022 அமைந்தது. உலகளவில் அனைத்திலும் தலைசிறந்து விளங்கும் திறன்மிக்கவர்களாகத் தமிழ்நாட்டு இளைஞர்களை உருவாக்கும் இலக்கை அடைய 2023-இல் வீறுநடை போடுவோம். புத்தாண்டே வருக… புதுவாழ்வு தருக…இணையற்ற இளைய ஆற்றல் வெல்க. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.