
புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் இயங்கி வரும் பாரத மிகுமின் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களின் மூலமாக இயங்கக்கூடிய பாரத மிகுமின் நிறுவன ஊழியர்களின் சமூக சேவை அறக்கட்டளையின் மூலமாக புதுக்கோட்டை மற்றும் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஆதரவற்றவர்களுக்கு பல்வேறு வகையான உதவிகளை தொடர்ந்து செய்து வருகிறது.
அதன் தொடர்ச்சியாக தற்போது புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகில் தொண்டைமான் ஊரணியில் வசித்து வரும் மாற்றுத்திறனாளி பெண்மணி ஒருவருக்கு 17,000 ரூபாய் மதிப்பில் சுயதொழில் ஏற்படுத்தி கொடுக்கும் பொருட்டு பெட்டிக்கடைக்கு தேவையான கட்டுமானப் பொருட்களும் பெட்டிக்கடைக்கு தேவையான வியாபார பொருட்களும் அறக்கட்டளையின் மூலமாக வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் ஆதரவற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் குழு தலைவர் மற்றும் அறக்கட்டளையின் உறுப்பினர்கள், பெல் நிறுவன ஊழியர்கள் கலந்து கொண்டனர். ஆதரவற்ற நிலையில் உள்ள எனக்கு செய்த உதவி பயனுள்ளதாக இருக்கும் என பயனாளி பாரத மிகு மின் நிறுவன ஊழியர்களின் சமூக சேவை அறக்கட்டளைக்கு நன்றியை தெரிவித்துக் கொண்டார்.