மாணவிக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் மீது வழக்கு பதிவு

சட்டக்கல்லூரி மாணவிக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் தேடி வருகின்றனர்.

சிவகங்கை மாவட்டம் காமராஜர் காலனியைச் சேர்ந்த பாரத் லால் என்பவர் போட்டோ ஸ்டுடியோ வைத்து நடத்தி வந்துள்ளார்.

இந்நிலையில் அந்த ஸ்டுடியோவிற்கு புகைப்படம் எடுக்க சென்ற நான்காம் ஆண்டு படிக்கும் சட்டக்கல்லூரி மாணவிக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு அதனை புகைப்படம் எடுத்து வைத்துக் கொண்டு, மாணவியின் தொலைபேசிக்கு புகைப்படத்தை அனுப்பி மிரட்டி மீண்டும் மீண்டும் பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், அதனால் அந்த மாணவி 2 மாதமாக கருவுற்றுள்ளார் என தெரிகிறது.

இதனைத்தொடர்ந்து சட்ட கல்லூரி மாணவி தனது தாயுடன் சென்று பாரத்லாலிடம் கேட்டபொழுது, அவர் இருவரையும் மிரட்டிவிட்டு பதுங்கிய நிலையில், சிவகங்கை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சட்டக்கல்லூரி மாணவி புகார் அளித்துள்ளார்.

பின்னர் மாணவியின் புகாரின்பேரில் மகளிர் காவல் துறையினர் மயக்க மருந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு பதுங்கியுள்ள பாரத்லால் மீது வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.