மாணவர்கள் மது அருந்தும் பிரச்னைக்கு தீர்வு காணப்பட வேண்டும் இல்லையென்றால் மது விற்பனைக்கு தடை விதிக்க நேரிடும்: உயர் நீதிமன்ற கிளை எச்சரிக்கை

பள்ளி மாணவர்கள் மது அருந்தும் பிரச்னைக்கு தீர்வு காணப்பட வேண்டும். இல்லையெனில் மது விற்பனைக்கு தடைவிதிக்க நேரிடும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது.

டாஸ்மாக் விற்பனை நேரத்தை மாற்றியமைக்க கோரிய வழக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் இன்று விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிபதிகள் பிறப்பித்துள்ள உத்தரவு, சீருடையுடன் பள்ளி மாணவர்கள் மது அருந்தும் புகை ப்படம் அதிர்ச்சியை தருகிறது. பள்ளி மாணவர்கள் மது அருந்தும் பிரச்னைக்கு தீர்வு காணப்பட வேண்டும். இல்லையெனில் மது விற்பனைக்கு தடைவிதிக்க நேரிடும். இவ்வாறு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் டாஸ்மாக் விற்பனை நேரத்தை மதியம் 2 மணி முதல் இரவு 8 மணி வரை மாற்றியமைக்க கோரிய வழக்கை 2 வாரத்துக்கு ஒத்திவைத்தனர்.