மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதிக்கு மெரினா கடற்கரையில் ரூ.39 கோடியில் நினைவிடம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதிக்கு மெரினா கடற்கரையில் ரூ.39 கோடியில் 2.21 ஏக்கரில் நினைவிடம் அமைக்கப்படும் என பேரவையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

 சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் முதலமைச்சர் அறிவித்தார். சென்னை மெரினா காமராஜர் சிலையில் ரூ.39 கோடியில் 2.21 ஏக்கரில் கலைஞருக்கு கருணாநிதிக்கு நினைவிடம் கட்டப்படும் என கூறினார் கலைஞர் கருணாநிதியின் வாழ்க்கை, சிந்தனை குறித்து நவீன ஔி படங்களுடன் நினைவிடம் அமைக்கப்படும் என தெரிவித்தார். கடந்த அரைநூற்றாண்டு காலத்தில் நிரந்திர தலைப்புச் செய்தியாக இருந்தவர் கலைஞர் கருணாநிதி என மு.க.ஸ்டாலின் புகழாரம் செய்தார். ஏற்கனவே நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில் கலைஞருக்கு நினைவிடம் கட்டப்பட உள்ளது. இன்று நாம் பார்க்கும் தமிழ்நாடு கலைஞர் உருவாக்கியது என பேசினார்.

தமிழ்மொழி அந்தஸ்து பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு உரிமை பெற்று தந்தவர் கலைஞர். நவீன தமிழ்நாட்டை உருவாக்கிய சிற்பிதான் கலைஞர் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாராம் சூட்டினார். இந்திய அரசியலை வழிநடத்திய அரசியல் ஞானி கலைஞர் என கூறினார். என் பாதை சுயமரியாதை, தமிழ்நெறி காக்கும் பாதை என கூறினார். 13 முறை தொடர்ந்து எம்.எல்.ஏ.வாக இருந்தவர், தோல்வி அவரை தொட்டதே இல்லை, வெற்றி அவரை விட்டதே இல்லை என பேசினார். 5 முறை முதலமைச்சராக இருந்து தமிழ் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் திட்டம் வகுத்தவர் கலைஞர் என கூறினார். இந்நிலையில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞருக்கு மெரினாவில் நினைவிடம் அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.