மரப்பலகையில் திருவள்ளுவரை செதுக்கி புதுக்கோட்டை மாணவி மாநில அளவில் தேர்வாகியுள்ளார்.

மரப்பலகையில் திருவள்ளுவரை செதுக்கி புதுக்கோட்டை மாணவி மாநில அளவில் தேர்வாகியுள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் திருக்கோகர்ணத்தைச் சேர்ந்த முத்துக்குமார் கவிதா இவர்களின் மகள் அஞ்சனாஸ்ரீ, இவர் திருக்கோகர்ணம்  அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். சிறுவயதிலிருந்தே பேச்சுப்போட்டி, ஓவிய போட்டி, கட்டுரை போட்டி என அனைத்து கலை திறன்களிலும் ஆர்வமிக்கவர் அஞ்சனாஸ்ரீ, இவர் கடந்த வாரத்தில் புதுக்கோட்டையில் நடைபெற்ற அரசு கலைத்திருவிழாவில் வெற்றி பெற்று மாநில அளவில் போட்டி கோயம்புத்தூர் நேரு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது.  இப்போட்டியில் கலந்த கொண்ட அஞ்சனாஸ்ரீ முதலிடத்தை பிடித்து தேர்வாகியுள்ளார்.