
தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தூய்மையான பள்ளிகளுக்கு அளிக்கப்படும் விருதை பெற்றமைக்காக காரைக்கால் மாவட்டத்தை சேர்ந்த மூன்று பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களான விஜயராகவன், பூவம் வசந்தி, செல்வராஜ் ஆகியோர் மரியாதை நிமித்தமாக போக்குவரத்துத் துறை அமைச்சர் சந்திர பிரியங்காவை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
அதன்பிறகு, காரைக்கால் மாவட்ட ஆட்சியர் முஹம்மது மன்சூர் மற்றும் முதுநிலை போலீஸ் காவல் கண்காணிப்பாளர் லோகேஸ்வரனை நேரில் சந்தித்து தலைமையாசிரியர்கள் வாழ்த்து பெற்றனர். இவர்கள் அனைவரையும் காரைக்கால் மாவட்ட ஆட்சியர் வெகுவாக பாராட்டினார்.
இந்நிகழ்ச்சியில், மேல்நிலை கல்வித் துணை இயக்குனர் ராஜேஸ்வரி, முதன்மை கல்வி அதிகாரி ராஜசேகரன் மற்றும் வட்ட துணை ஆய்வாளர்கள் பொன்.சௌந்தரராசு, பால்ராஜ் உடனிருந்தனர்.