மதுவுக்கு அடிமையாகாதீர்கள் மது அருந்திவிட்டு வாகனத்தில் செல்லாதீர்கள் மீமிசலில் விழிப்புணர்வு பேரணி

மதுவுக்கு அடிமையாகாதீர்கள் மது அருந்திவிட்டு வாகனத்தில் செல்லாதீர்கள் என்று வருவாய் துறை மூலம் மற்றும் மலர் கலைக்குழு மூலமும் மீமிசலில் விழிப்புணர்வு பேரணி

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் அருகே மீமிசல் பேருந்து நிலையத்தில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு அவர்களின் அறிவுறுத்தலின்படி அறந்தாங்கி கோட்டாட்சியர் சொர்ண ராஜ் அவர்களின் பரிந்துரையின்படிஅறந்தாங்கி கலால் ஆய்வாளர் பரணி அவர்களின் பரிந்துரையின்படி ஆவுடையார் கோவில் வட்டாட்சியர் வில்லியம் மோசஸ் அவர்களின்பரிந்துரையின்படி மீமிசல் பேருந்து நிலையத்தில் மீமிசல் வருவாய் ஆய்வாளர் விஜயா அவர்கள் தலைமையில் மீமிசல் கிராம நிர்வாக அதிகாரி பிரபு அவரின் முன்னிலையிலும் மற்றும் கிராம நிர்வாக உதவியாளர்கள் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட மலர் கலை குழு அவர்களின் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது

இதில் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டாதீர்கள் மது அருந்துவதால் பல விபரீதங்கள் ஏற்படுகின்றது என்று பல்வேறுபஉதாரணங்கள் சொல்லிமீமிசல் பேருந்து நிலையம் முன்பு  விழிப்புணர்வு செய்தனர் .அப்பொழுது வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கப்படும் முகாம் நடைபெற்றுக் கொண்டு உள்ளது அதை பயன்படுத்தி அனைத்து வாக்காளர்களும் பயன்படுத்திக் கொள்ளுமாறு அதில் கூறினார்கள்.புதுக்கோட்டை மாவட்டம் மலர் கலைக்குழு விழிப்புணர்வு பேரணியில் அவர்கள் கூறியதாவது மது என்பது மனிதருக்கு எமன் அதனால் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டாதீர்கள்மது அருந்திவிட்டு நீங்கள் வாகனம் ஓட்டினால் உங்கள் உயிருக்கும் மட்டுமல்ல பாதசாரி உயிர்களுக்கும் மது எமனாகிவிடும் என்று என்று கூறினார்கள்.