மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு வியாபாரிகள் சங்கப் பேரவை மதுரை மண்டலம் சார்பாக மண்டல தலைவர் மைக்கேல்ராஜ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில நிர்வாகிகள் சூசை அந்தோணி,தங்கராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர், மாநிலத் தலைவர் முத்துக்குமார் ,மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் அருண்குமார் ஆகியோர் பங்கேற்று கண்டன ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசு பொருட்கள் மீது விதிக்கப்பட்ட ஜிஎஸ்டி வரியை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் ,வாகன விதிமீறல் என்ற பெயரில் நடைபெறுகின்ற அதிரடி நடவடிக்கையை தடை செய்ய வேண்டும், மின்கட்டணம் ,பெட்ரோல், டீசல் ,கேஸ் சிலிண்டர் ,எரிபொருள் கட்டணங்களை குறைக்க வேண்டும், கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்ற வேண்டும், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி-க்கு சென்னை கடற்கரையில் சிலை அமைக்க வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.