மணியம்பலம்  ஸ்ரீ தையல்நாயகி அம்பாள் ஸ்ரீ வினைதீர்த்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் நாளை மறுநாள் நடைபெறுகிறது

இந்து சமய அறநிலைத்துறை புதுக்கோட்டை தேவஸ்தானத்தை சேர்ந்த மணியம்பலம்  அருள்மிகு தையல்நாயகி அம்பாள், அருள்மிகு வினைதீர்த்தீஸ்வரர் உடனுறை கோயில் கும்பாபிஷேகம் நாளைமறுநாள் ஜனவரி 27 ஆம் தேதி வெள்ளிக்கிழமை வெகு விமர்சையாக நடைபெற உள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் மணியம்பலத்தில் அமைந்திருக்கும்  அருள்மிகு தையல்நாயகி அம்பாள், அருள்மிகு வினைதீர்த்தீஸ்வரர் ஆலயம் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு அஷ்டபந்தன கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை காலை 9:30 மணிக்கு மேல் 10.25 மணிக்குள் நடைப்பெற உள்ளன. அதற்கான அழைப்பிதழ்களை குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் மற்றும் பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் ஆலயத்தின் பிச்சை குருக்கள் உள்ளிட்டோருக்கு விழா கமிட்டியாளர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் சார்பில் நேரில் வழங்கப்பட்டது.

நிகழ்வில் ஊர் அம்பலம் பெரியவர் வைத்தி, தொழிலதிபர் எஸ்.வி.எஸ்.ஜெயக்குமார் உள்ளிட்டோர் வழங்கினார்கள். மணியம்பலம் கிராமத்தில் வேண்டிய வரத்தை வேண்டிய உடனே வழங்கி பக்தர்களை காத்து நிற்கும் ஸ்ரீ தையல்நாயகி அம்பாள்,ஸ்ரீ வினைதீர்த்தீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறுவதையடுத்து அப்பகுதி பொதுமக்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். இந்த விழாவில் தமிழக அமைச்சர்கள் எஸ். ரகுபதி, மெய்யநாதன், பெருந்தொழிலதிபர்கள் ராமச்சந்திரன், ரத்தினம் உள்ளிட்ட அரசு அதிகாரிகள், ஆன்மீக மெய்யன்பார்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க இருக்கிறார்கள்.