மணவிடுதி உயர்நிலைப்பள்ளியில் தமிழ்க்கூடல் விழா

தமிழக அரசின் ஆணைக்கிணங்கவும், பள்ளிக்கல்வித்துறை  இயக்குநரின்  வழிகாட்டுதலின்படியும் புதுக்கோட்டை முதன்மைக் கல்வி அலுவலர் ஆலோசனையின்படியும்  மணவிடுதி அரசு உயர்நிலைப் பள்ளியில்  தமிழ்க்கூடல் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு பள்ளியின் தலைமையாசிரியர் மூ.அருணாசலம் தலைமை தாங்கினார்.   9ஆம் வகுப்பு மாணவி இரா.பிரியதர்ஷினியின் வரவேற்பு  நடனத்துடன் விழா தொடங்கியது. உதவித்தலைமை ஆசிரியர் ரெ.உதயகுமார் அனைவரையும் வரவேற்றார். பத்தாம் வகுப்பு மாணவி ப.ரித்திகாஸ்ரீ தமிழ் இலக்கிய வரலாறு  குறித்து நினைவு கூர்ந்தார். சிறப்பு அழைப்பாளராக  மருதாந்தலை பள்ளியின் முதுகலை ஆசிரியர் இரா.பாலசுப்பிரமணியன் மாணவர்களின் கல்வி முன்னேற்றப்பாதை  குறித்து நகைச்சுவை கலந்த கவிதைகளோடு வாழ்த்துரை வழங்கினார். புதுக்கோட்டை தமிழ்ச் சங்கச் செயலாளர் தமிழ்ச்சுடர் முனைவர் மகா.சுந்தர்,  தமிழ்மொழியின் பெருமைகளையும்,  உலகத் தமிழ்  மாநாட்டில் உலக மொழிகளுக்கெல்லாம் ஆதி மொழி நம்  தமிழ் மொழி என  நிரூபிக்கப்பட்டுள்ளதாக ஜேம்ஸ் வார்ன் கூறுகிறார். அவர் ஒரு தமிழர் அல்ல என்பதை நினைவுக் கொள்ளுங்கள். பள்ளி பருவத்தில் மாணவர்கள் தமிழ் மொழியை புரிந்து கற்று வாழ்வில் மேம்பட வாழ்த்துக்களை தெரிவித்து சிறப்புரையாற்றினார். தமிழ்க்கூடல் நிகழ்வையொட்டி நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. பள்ளியின் தமிழாசிரியை சி.புவனேஸ்வரி நன்றி கூறினார். நாட்டுப்பண் இசைக்க விழா இனிதே நிறைவுற்றது.