மணப்பாறை அடுத்த கண்ணுடையான்பட்டி வாகைகுளத்தை சுற்றி சுகாதார சீர்கேடு – முதலமைச்சருக்கு மனு அளித்தும் பயனில்லை

மணப்பாறை அடுத்த கண்ணுடையான்பட்டி வாகைகுளத்தை சுற்றி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதால் தொற்றுநோய் பரவும் சூழல் தற்பொழுது ஏற்பட்டுள்ளது. இதனை உடனடியாக அப்பகுதி மக்கள் நலப் பிரதிநிதிகள் கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுகிறது.

முதல்வருக்கு அளித்த கோரிக்கை மனு தேதி.25.11.2021

திருச்சி மாவட்டம், மணப்பாறை வட்டம், ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கண்ணுடையான்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட வாகைகுளம் இந்த குளம் சில வருடங்களாகவே சில சமூக விரோதிகள் திட்டமிட்டு சுகாதார சீர்கேட்டையை ஏற்படுத்தும் நோக்கில் செயல்பட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கும் புகார் மனு அனுப்பியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதுதான் வேதனையின் உச்சமாக பார்க்கப்படுகிறது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 25ஆம் தேதி சாய் அட்சயா நகர் குடியிருப்போர் நல சங்கம் சார்பில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அனுப்பி உள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: கண்ணுடையான்பட்டி பஞ்சாயத்துக்கு உட்பட்ட குமரப்பட்டி சாலையில் வாகைகுளம் அமைந்துள்ளது. நகரின் முக்கிய பகுதியில் அமைந்துள்ள வாகை குளபகுதி பல்வேறு சுகாதார சீர்கேடுகள் மிகுந்த பகுதியாக காணப்படுகிறது. குளத்தை சுற்றி பல்வேறு கழிவுகள் நிறைந்த குப்பைகள், கழிவு மேடுகள் திட்டு திட்டாக உள்ளன. கழிவு பொருட்களை பலர் அங்கு வந்து கொட்டியுள்ளனர். தொடர்ந்து கொட்டியும் வருகின்றனர்.

பொதுமக்களின் கோரிக்கைக்கு செவிசாய்க்கும் வகையில் புதுகை வரலாறு கடந்த மார்ச் மாதம் 8ம் தேதி வெளியிட்டுள்ள செய்தி போஸ்டர்

இதன் காரணமாக அருகாமையில் உள்ள சாய் அட்சயா நகர், பெஸ்டோ நகர் உள்ளிட்ட குடியிருப்பு வாசிகள் சுகாதாரமற்ற சூழ்நிலையில் வசிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக முதியோர், குழந்தைகளுக்கு சுவாச பிரச்சனை உடல் உபாதைகள் ஏற்படுகின்றது. எனவே தமிழக முதல்வர் அலுவலர்களுக்கு உரிய அறிவுரை வழங்கி எங்கள் பகுதியில் உள்ள சுகாதார சீர்கேடுகளை அகற்றி நிரந்தரமாக சுகாதாரமுள்ள பகுதியாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம் என்று அந்த மனுவில் தெரிவித்துள்ளனர். முதல்வருக்கு மனு கொடுத்து ஒரு வருடம் ஆகியும் தங்கள் கோரிக்கை நிறைவேறாத பட்சத்தில் அப்பகுதிமக்கள் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

8 + 2 =