மணப்பாறையில் ஏ.எம்.கோபுக்கு புகழ் அஞ்சலி

மணப்பாறை புத்தாநத்தம் சாலையில் உள்ள நகராட்சி அலுவலகம் அருகில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகரக்குழு சார்பில் விடுதலை போராட்ட வீரர் தொழிற்சங்கத் தலைவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தோழர் ஏ.எம்.கோபு பத்தாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவரின் திருவுருவ படத்திற்கு  மலர்துவி புகழ் அஞ்சலி  செலுத்தினர். 

இப்புகழ் அஞ்சலிக்கு சி.பி.ஐ.  நகரச் செயலாளர் ஜனசக்தி உசேன் தலைமை வகித்தார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முன்னள் மாநில நிர்வாககுழு உறுப்பினர் இந்திரஜித் போக்குவரத்துகழக மாநில துணை பொது செயலாளர் சுப்ரமணியன், நகர்மன்ற உறுப்பினர் தங்கமணி, மாவட்ட குழு உறுப்பினர்கள் பழனிச்சாமி,  சௌக்கத்அலி, நல்லுச்சாமி, ராஜேந்திரன் ,ரவிச்சந்திரன் உட்பட நகரக்குழு உறுப்பினர்கள் ஏ.ஐ.டி.யூ.சி நிர்வாகிகள் மலர்துவி புகழ் அஞ்சலி செலுத்தினர்.