
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் பகுதியில் அமைந்துள்ள சிறப்பு வாய்ந்த அருள் தரும் புவிய அம்மா உடனமர் அருள்மிகு காற்று இறைவ அப்பா திருக்கோவிலில் புரட்டாசி மாத மகாளய அமாவாசையை முன்னிட்டு, சிறப்பு பூஜை நடைபெற்றது. இந்த சிறப்பு பூஜையில் இப்பகுதியை சேர்ந்த பக்தர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
இவ்விழாவில் அகில பாரத இந்து மகாசபா சார்பாக, கள்ளக்குறிச்சி மாவட்டத்தலைவர் சபரிராஜன், மாவட்ட பொதுச் செயலாளர் பிரகாஷ் தலைமையில், சின்னசேலம் ஒன்றியத்தின் சார்பில், சிறப்பு பூஜையில் கலந்து கொண்ட பக்தர்கள், பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்வின் போது ஒன்றியத் தலைவர் வெங்கடேசன், ஒன்றிய செயலாளர் சூரியா, ஒன்றிய பொருளாளர் ரவிச்சந்திரன், ஒன்றிய துணைத் தலைவர் ரமேஷ் மற்றும் கோவில் நிர்வாகி சோலையப்பர் மற்றும் பக்தர்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.