
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே ஆலவயல் அரசு மேல்நிலைப் பள்ளியில் வகுப்பறைகளில் தண்ணீர் இல்லாததால் மாணவ, மாணவிகள் சிரமப்பட்டு வந்தனர், இத்தகவலை பள்ளியின் தலைமை ஆசிரியர் ஆலவயல் ஊராட்சி மன்றத் தலைவர் சந்திரா சக்திவேலின் கவனத்திற்கு எடுத்துச் சென்றார்.
இதனை அடுத்து சந்திரா சக்திவேல் ஏற்பாட்டின் படி ஆலவயல் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களின் வகுப்பறைகளுக்கு குடிநீர் வழங்கப்பட்டது. இந்த ட்ரம்மினை தூத்தூர் காடப்பன் குடும்பத்தார்கள் மற்றும் ஆலவயல் அரசு மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் விவேக், சேகர், ஜெயபால் ஆகியோர் வழங்கினர், இந்நிகழ்வில் ஆலவயல் ஊராட்சி மன்றத் தலைவர் சந்திரா சக்திவேல் பள்ளியின் தலைமை ஆசிரியர் நவநீதகிருஷ்ணன் ஆகியோர் உடன் இருந்தனர்.