பொன்னமராவதியில் தமிழக அரசின் இலவச பொங்கல் பரிசு மற்றும்1000 ரூபாய் ரொக்கம் வழங்கும் விழா.

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஒன்றிய நகரப் பகுதியில் உள்ள அனைத்து நியாய விலை கடைகளின் மூலம் தமிழக அரசின் இலவச பொங்கல் பரிசு மற்றும் ஆயிரம் ரூபாய் ரொக்கம் வழங்கல் தொடங்கப்பட்டது, முன்னதாக வையாபுரியில் உள்ள  நியாய விலை கடையில் பொன்னமராவதி பேரூராட்சி தலைவர் சுந்தரி அழகப்பன் ,துணைத் தலைவர் வெங்கடேஷ், பொன்னமராவதி வட்டாட்சியர் பிரகாஷ் தலைமையில் பொதுமக்களுக்கு பரிசு பொருட்கள் மற்றும் ரூ.1000 ரொக்க தொகையினை பொதுமக்களுக்கு வழங்கினர்.

தொடர்ந்து பாலமேடு,காயம்புஞ்சை, தொட்டியம்பட்டி உள்ளிட்ட நியாயவிலை கடைகளில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது, இதில் திமுக நகர செயலாளர் அழகப்பன், தலைமை செயற்குழு உறுப்பினர் ஜெயராமன், காளிதாஸ் ,ராமநாதன்,சிக்கந்தர், திமுக நிர்வாகிகள்  உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு வழங்கினர்.