பேஸ்புக் காதலால் விபரீதம் – ஒரே நேரத்தில் 2 காதலர்கள்  ஏமாற்றிய இளம்பெண் நள்ளிரவில் கொலை

கேரள மாநிலம் திருவனந்தபுரம் வடசேரி கரையைச் சேர்ந்த திவ்யா(17) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) சம்பவத்தன்று நள்ளிரவில் திவ்யா ரத்த காயங்களுடன் தனது வீட்டு கதவை தட்டி உள்ளார்.கதவை திறந்து பார்த்த பெற்றோர் பதறிவிட்டனர், திவ்யா கழுத்து அறுக்கப்பட்டிருந்த நிலையில் ரத்தம் கொட்டிக் கொண்டிருந்தது. இதை பார்த்து அலறிய பெற்றோர்கள், உடனடியாக மகளை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

தனியார் மருத்துவமனைஒன்றில் திவ்யாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது, ஆனால் திவ்யா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது, திவ்யா எப்போதுமே பேஸ்புக்கில் மூழ்கி இருப்பாராம், யார் நட்பு விடுத்தாலும், உடனே ஏற்றுக் கொள்வாராம். அடுத்த செகண்டே, அவர்களிடம் சாட்டிங்கிலும் ஈடுபட்டு விடுவார். அப்படித்தான் பள்ளிக்கல் பகுதியைச் சேர்ந்த கோபு என்ற இளைஞர், பேஸ்புக் மூலம் திவ்யாவுக்கு அறிமுகமாகி உள்ளார். வழக்கம்போல் திவ்யா இவரிடம் சேட்டிங் செய்து வந்துள்ளார். ஒருகட்டத்தில் கோபு, திவ்யாவை காதலிப்பதாக சொல்லி உள்ளார். திவ்யாவும் பதிலுக்கு காதலிப்பதாக சொல்லி உள்ளார். திவ்யாவை கோபு உயிருக்கு உயிராக விரும்பினார். ஆனால் அதேசமயம், திவ்யா நள்ளிரவு நேரங்களிலும் பேஸ்புக்கில், வேறு சில நபர்களுக்கு மெசேஜ் செய்வதாக கோபு சந்தேகப்பட்டார். மிட்நைட்டிலும் ஆன்லைனில் இருக்கிறாயே என்று கோபு கேட்டதற்கு, அப்படி இல்லவே இல்லை என்று திவ்யா மறுத்துள்ளார்.

வேறு யாருடனாவது பழகுகிறாயா, மெசேஜ் செய்கிறாயா? என்று கோபு கேட்டதற்கும், திவ்யா அதற்கும் மறுப்பு சொல்லி உள்ளார். கோபுவுக்கு சந்தேகம் தீரவில்லை என்றாலும், திவ்யா மீதுள்ள காதலால், தகராறு எதுவும் செய்யாமல் இருந்தார். இந்நிலையில், ‘அகில்’ என்ற இளைஞர் திவ்யாவுக்கு பேஸ்புக்கில் நட்பு அழைப்பு விடுத்தார். திவ்யாவும் அவரது நட்பை ஏற்றதுடன், வழக்கம்போல் மெசேஞ்சரில் சேட்டிங் செய்ய தொடங்கி உள்ளார். சில நாட்களில் திவ்யாவை காதலிப்பதாக அகில் கூறியுள்ளார். இதைக்கேட்டு சந்தோஷப்பட்ட திவ்யா, தானும் காதலிப்பதாக அகிலிடம் சொல்லி உள்ளார்,  ஒருநாள் திவ்யாவை நேரில் பார்க்க வேண்டும் என்று அகில் சொல்லவும், திவ்யாவும் அன்றைய தினம் இரவே தன்னுடைய வீட்டிற்கு பக்கத்தில் வருமாறு அகிலிடம் சொல்லி உள்ளார். நள்ளிரவில் வீட்டில் அனைவரும் தூங்கியபிறகு, கதவை திறந்து கொண்டு வெளியேறியுள்ளார் திவ்யா.

அப்போது நள்ளிரவு ஒன்றரை மணி ஆகியிருந்தது. சொன்னபடியே, வீட்டு பக்கத்தில் காத்திருந்தார் கோபு. தலையில் ஹெல்மட் அணிந்து பைக் மீது உட்கார்ந்திருந்தார். அகில் அருகில் சென்ற திவ்யா, இந்த நேரத்தில்தான் யாருமில்லையே, ஹெல்மெட்டை கழற்றுமாறு சொல்லியுள்ளார். அகிலும் ஹெல்மெட்டை கழற்றியுள்ளார்.. அப்போதுதான் அது தன்னுடைய காதலன் கோபு என்பதை அறிந்து திவ்யா அதிர்ச்சி அடைந்தார். நள்ளிரவு நேரத்தில் முன்பின் தெரியாத ஒருத்தனை இப்படித்தான் வந்து பார்ப்பதா? காதலன் நான் இருக்கும்போது, இன்னொருவனை சந்திப்பதற்காக நள்ளிரவில் வீட்டை விட்டு வரும் அளவிற்கு உனக்கு தைரியமா? என்று கேட்ட கோபு, கையோடு கொண்டு வந்திருந்த கத்தியால், திவ்யாவின் கழுத்தை அறுத்துவிட்டு, பைக்கில் இருந்து தப்பிச்சென்று விட்டார். அதற்கு பிறகுதான் திவ்யா, தன் வீட்டுக்கதவை தட்டியுள்ளார். இவ்வளவும் பெற்றோர்களிடம் சொல்லிய திவ்யா, கடைசியில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரையும் விட்டுவிட்டார். இந்த சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.