பேக்கரி மஹாராஜின் தானியங்கி இயந்திரம் மக்கள் பயன்பாட்டிற்கு வந்தது

புதுக்கோட்டையில் முதன்முறையாக மார்த்தாண்டபுரம் பேக்கரி மஹராஜ் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் பொதுமக்களின் நலன் கருதி அவர்களுக்கு தேவையான உணவு பொருட்களை விரைந்து வழங்கும் நோக்குடன் பேக்கரி மஹராஜ் தயாரிப்புகளான அனைத்து பொருட்களும் எளிதில் பெற்றுச் செல்லக்கூடிய 24 மணி நேரமும் இயங்கும் தானியங்கி சேவை இன்று முதல் மக்கள் பயன்பாட்டிற்கு வந்தது.

உணவு பொருள் வழங்கும் தானியங்கி மிஷின் சேவையின் துவக்க விழாவில் பேக்கரி மஹராஜ் வாடிக்கையாளர்கள் கலந்து கொண்டு திறந்து வைத்து மகிழ்ந்தனர். பொதுமக்கள் எந்த நேரத்திலும் தங்களுக்கு தேவையான பொருட்களை ஆன்லைன் மூலமாகவும் பணத்தை நேரடியாக செலுத்தியும் பெற்றுச் செல்லலாம் என்றும் குறிப்பாக இரவு நேரங்களில் உணவுப் பொருட்கள் கிடைக்காமல் பலர் தவித்து வந்ததை அறிந்து அவர்களின் இயக்கத்தை போக்கிடும் வகையில் சுமார் 4 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் தானியங்கி மெஷின் வாங்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டில் கொண்டு வந்துள்ளதாக பேக்கரி மகராஜின் நிர்வாக இயக்குனர் அருண் சின்னப்பா தெரிவித்தார்.