புதுக்கோட்டையில் புத்தாண்டு தினத்தன்று ரூ.25 ஆயிரம் ரூபாய் பணத்தை தொலைத்துவிட்டு காவல்துறையினரிடம் ஒரு தம்பதியினர் கண்ணீர் விட்ட சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியது.
புதுக்கோட்டையில் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு கொண்டாட்டங்கள் களை கட்டிய நேரத்தில் ஒரு தம்பதி ரூ. 25 பணத்தை தொலைத்துவிட்டு கண்ணீர் விட்ட சம்பவம் அரங்கேறியது. புதுக்கோட்டை வடக்கு நான்காம் விதியைச் சேர்ந்த தம்பதி ஜான்சி – கலியமூர்த்தி. கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்த இவர்கள் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு மாலையீடு பகுதியில் உள்ள தேவாலயம் ஒன்றிற்கு வழிபாட்டுக்கு சென்றுள்ளனர்.

அப்போது ஜான்சி தனது ஹேண்ட் பேக்கில் 25 ஆயிரம் ரூபாய் பணத்துடன் சென்றுள்ளார். மாலையீடு பகுதியில் உள்ள தேவாலயத்தை நெருங்கிய போது தனது ஹேண்ட் பேக் தொலைந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இதனைத் தொடர்ந்து ஜான்சி மற்றும் கலியமூர்த்தி ஆகிய இருவரும் இரவு பாதுகாப்பையில் ஈடுபட்ட காவல்துறையிடம் தங்களது புகார்களை தெரிவித்தனர். அப்போது விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், இது தொடர்பாக நகர காவல் நிலையத்தில் புகார் அளிக்கும்படி தெரிவித்துள்ளனர்.
அப்போது கண்ணீர் வடித்த இந்த தம்பதியினர், புதுக்கோட்டை நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறையினர், புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்து அவர்களுக்கு அறிவுரை கூறிய வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். புத்தாண்டு அன்று புதுக்கோட்டையில் ஒரு தம்பதியினர் 25000 ரூபாய் பணத்தை பறி கொடுத்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியது.