புதுவை மாநிலத்தில் தந்தை பெரியாரின் 144வது பிறந்தநாள்: திரு உருவ சிலைக்கு போக்குவரத்து துறை அமைச்சர் மாலை அணிவித்து மரியாதை

புதுவை மாநில அரசு காரைக்கால் மாவட்ட நிர்வாகம் சார்பாக தந்தை பெரியார் ஈ. வே. ராமசாமியின் பிறந்த தினத்தை முன்னிட்டு ஆட்சியர் வளாகம் எதிரே அமைந்துள்ள அண்ணாரின் திரு உருவ சிலைக்கு  போக்குவரத்து துறை அமைச்சர்  சந்திர பிரியங்கா  தலைமையில் காரைக்கால் மாவட்ட ஆட்சியர் எல்.முகமது மன்சூர்  முன்னிலையில் மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள். இந்நிகழ்வில் துணை மாவட்ட ஆட்சியர் ,பேரிடர் மேலாண்மை எஸ். பாஸ்கரன், காவல் கண்காணிப்பாளர் தெற்கு  சுப்பிரமணியன், செய்தி மற்றும் விளம்பரத்துறை உதவி இயக்குனர் பொறுப்பு குலசேகரன் மற்றும் அரசு அதிகாரிகள், முக்கிய பிரமுகர்கள் ,சமாதான கமிட்டி உறுப்பினர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.