புதுக்கோட்டை வைரம்ஸ் மெட்ரிக்பள்ளியில் குடியரசு தினவிழா மற்றும் ஆண்டு விழா கொண்டாட்டம்

புதுக்கோட்டை வைரம்ஸ் மெட்ரிக்பள்ளியில் குடியரசு தினவிழா மற்றும் ஆண்டு விழா இன்று கொண்டாடப்பட்டது இறைவணக்கப் பாடலோடு தொடங்கப்பட்டது, பள்ளியின் தலைவர் தேனாள்சுப்ரமணியன் கொடியேற்றி விழாவினைத் தொடங்கி வைத்தார், இவ்விழாவில் பள்ளியின் முன்னாள் மாணவர்களான மருத்துவர் வெங்கடேஷ் மற்றும் மருத்தவர் பாலசுப்ரமணியன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றி வெவ்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு விருதுகளையும் சான்றிதழ்களையும் வழங்கினர். மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது, இவ்விழாவில் பள்ளி நிர்வாக உறுப்பினர்கள் சுப்பிரமணியன், சீனிவாசன், பள்ளியின் முதல்வர் சிராஜுதீன், பள்ளியின் துணை முதல்வர் சுப்பிரமணியன்  பள்ளியின் ஒருங்கிணைப்பாளர் அஸ்வினி நாச்சம்மை, ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர், அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டு தேசியகீதத்துடன்  விழா இனிதே நிறைவுற்றது