புதுக்கோட்டை வெங்கடேஸ்வரா பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர்களுக்கான “வேலைவாய்ப்பு நேர்காணல்”

புதுக்கோட்டை வெங்கடேஸ்வரா பாலிடெக்னிக் கல்லூரியில் நோக்கியா நிறுவனத்திற்கு  மாணவர்களுக்கான “வேலைவாய்ப்பு  வளாக   நேர்காணல்”  கல்லூரியில் நடைபெற்றது.

கல்லூரியின் செயலாளர் பி.கருப்பையா தலைமை தாங்கினார். பொருளாளர் ஆர்.எம்.வீ.கதிரேசன் முன்னிலை வகித்தார். இதில் சென்னையை சேர்ந்த நோக்கியா நிறுவன மனிதவள மேலாளர் மகேஷ் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு  நேர்காணல் நடத்தினார். இந்த நேர்காணலில் கந்தர்வகோட்டை அரசு பாலிடெக்னிக் கல்லூரி, அறந்தாங்கி அரசு பாலிடெக்னிக் கல்லூரி, காரைக்குடி அண்ணாமலை பாலிடெக்னிக் கல்லூரி ஆகிய கல்லூரிகளில் இருந்து சுமார் 200- க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். நேர்காணலில் தேர்வு செய்யப்பட்ட 170 மாணவர்களுக்கு பணி நியமன ஆணையை  உடனடியாக  வழங்கி பாராட்டினார்.

நிகழ்ச்சியில் கல்லூரியின் செயலாளர் பி.கருப்பையா, கல்லூரியின் பொருளாளர் ஆர்.எம்.வீ.கதிரேசன், கல்லூரியின் முதல்வர் ஆர்.எம்.ஜீவானந்தம், துறை பேராசிரியர்கள் வாழ்த்துரை வழங்கினார். முன்னதாக கல்லூரியின் வேலைவாய்ப்பு அலுவலர் சரண்யா ராமன் வரவேற்புரை வழங்க, கல்லூரியின் துணை முதல்வர் திருமலை அரசன் நன்றி கூறினார்.