புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் 74-வது குடியரசுதினவிழாகொண்டாடப்பட்டது. விழாவிற்கு பள்ளியின் ஆலோசகர் கவிஞர் அஞ்சலிதேவி தங்கம்மூர்த்தி தலைமையேற்று தேசியகொடியை ஏற்றிவைத்துஉரையாற்றினார். அவர்பேசும் போது, சுதந்திரதினம் என்பது அந்நியர்களிடம் போராடி விடுதலை பெற்றதினம்,குடியரசுதினம் என்பது நமக்கான உரிமை அது வரையறுக்கப்பட்டது போன்ற வரலாற்று காரணங்களை மாணவர்கள் தெரிந்து வைத்திருக்கவேண்டும் என்று கூறினார்.
பள்ளியின் மேலாண்மை இயக்குநர் நிவேதிதாமூர்த்தி மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கினார். ஆசிரியர்கள் சுதா மற்றும் உதயகுமார் குடியரசுதின செய்திகளை தமிழிலும் ஆங்கிலத்திலும் பகிர்ந்துகொண்டனர், பள்ளியின் முதல்வர் கவிஞர் தங்கம்மூர்த்தி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு நினைவுபரிசுகள் வழங்கி சிறப்புரையாற்றினார், முன்னதாகஆசிரியை பவானி வரவேற்க நிறைவாக பள்ளியின் துணை முதல்வர் குமாரவேல் நன்றி கூறினார், நிகழ்வினை தமிழாசிரியர் கணியன் செல்வராஜ் மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவி சுவேதா ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.